அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேசுவரம் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள். கடற்கரையில் தர்ப்பண பூஜையும் நேற்று முதல் தொடங்கியது.

Update: 2021-07-06 18:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள். கடற்கரையில் தர்ப்பண பூஜையும் நேற்று முதல் தொடங்கியது.

கோவில்கள் திறப்பு

கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலிலும் 2 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் எதிரொலியாக கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட அக்னிதீர்த்த கடல் பகுதியில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

தர்ப்பண பூஜை தொடங்கியது

அதுபோல் 2 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் மீண்டும் அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் பூஜையும் தொடங்கியது. இதை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பணம் மற்றும் சங்கல்ப பூஜைகளையும் செய்தனர்.
பூஜை செய்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு மிகுந்த மன நிம்மதியுடன் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் தேங்காய், வெற்றிலை, பாக்கு பழம் பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்

மேலும் செய்திகள்