குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

Update: 2021-07-06 18:09 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). இவர் ஒரு குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்தார். அந்த குடும்பத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது.  திருமணத்துக்கு முன்னதாக குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அந்த இளம்பெண்ணை சேட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை வெளியே சொன்னால் மாப்பிள்ளை வீட்டில் சொல்லி திருமணத்தை நிறுத்தி விடுவதாக கூறி மிரட்டி அடிக்கடி அவரை சேட்டு பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருமணத்திற்கு பின்னர் அவரது தாய் வீட்டிற்கு சென்ற போது சேட்டு மீண்டும் அவரை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 
இதற்கு அவர் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் சேட்டு அவரது கணவர் வீட்டில் சொல்லி விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவங்களை இளம்பெண் அவரது கணவரிடம் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்