டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்தது

பரமக்குடி அருகே டயர் வெடித்து சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2021-07-06 18:09 GMT
போகலூர்,

பரமக்குடி தாலுகா சத்திரக்குடி அருகே உள்ளது மாவிலங்கை. இது மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி குளிர்பானம் ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்குவாகனம் ஒன்று டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தை ஓட்டிவந்த மதுரை மேலூரை சேர்ந்த அய்யங்காளை மற்றும் 2 பேருக்கு தலையில் அடிபட்டது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்