திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 115 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 115 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 115 பேர் இந்நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 236 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 48 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,253 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 611 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.