புதுக்கோட்டை மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுக்கோட்டை, ஜூலை.7-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 544 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 337 பேர் உயர்ந்துள்ளது.