மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம்-கலெக்டர் தகவல்
மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மானாமதுரை,
மானாமதுரை பகுதியில் ஆடுகள் இறப்புக்கு நிமோனியா நோய் தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது என்று கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி முகாம்
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சிரஞ்சீவிராஜ், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் முகமதுகான், பூச்சியியல் நிபுணர் ரமேஷ், நகராட்சி மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சுரேஷ், மருத்துவ ஆய்வாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிமோனியா
சின்னக்கண்ணனூர் ஊராட்சியில் புளிக்குளம், சின்னக்கண்ணனூர், மாடங்காத்தான் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் ஆடுகள் இறந்ததாக வந்த தகவலையடுத்து, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினரை உடனடியாக செல்ல உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்ததில் அவைகள் நிமோனியா நோய் தாக்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ முகாம்
எனவே, விவசாயிகள் ஆடுகளுக்கு நோய்கள் தாக்காத வண்ணம் மருத்துவக்குழுவினரை அணுகி தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சிரஞ்சீவிராஜ், உதவி இயக்குனர்கள் ஜோசப் அய்யாத்துரை, ராம்குமார், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.