பொள்ளாச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பொள்ளாச்சி
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மோட்டார் தொழிலாளர்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவம் தலைமை தாங்கினார்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட பொறுப்பாளர் சேதுராமன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, சேரன் போக்குவரத்து கழக மாவட்ட பொறுப்பாளர் அங்கமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.