கூடலூரில் ஆதிவாசி வாலிபர் தற்கொலை
கூடலூரில் ஆதிவாசி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சுதீஷ்(வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவில் குடும்பத்தினருடன் தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் தேடினர்.
அப்போது வீட்டின் அருகே உள்ள பலா மரத்தில் சுதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.