திண்டுக்கல் மாட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாட்டத்தில் மேலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது. அதேநேரம் 28 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 30 ஆயிரத்து 806 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.