குன்னத்தூர், ஊத்துக்குளியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

குன்னத்தூர், ஊத்துக்குளியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-06 16:00 GMT
திருப்பூர்
குன்னத்தூர், ஊத்துக்குளியில் ரூ.4 கோடியே 33 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிகளின் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார்.
குன்னத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் கருங்கல்மேடு முதல் ஆதியூர் ரோடு வரை ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணியையும், 13- வது வார்டில் ஸ்ரீகாவேரி நகர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியையும், 12-வது வார்டு பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியையும், 13-வது ஸ்ரீ காவேரி நகர் முதல் பேரூராட்சி எல்லை முடிய ரூ.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ரூ.4 கோடியே 33 லட்சத்தில் பணிகள்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் சிறிய பாலங்கள், சாலைகள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணியையும், வடுகபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகில் நாற்றங்கால் அமைக்கும் பணியையும் என மொத்தம் ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முன்னதாக ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகம் மற்றும் ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்