காரை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்
காரை கயிறு கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ், வங்கி கடன் தவணைகளுக்கு கால நீடிப்பு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆர்.டி.ஓ. அலுவலக பணிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டியு. சாலைபோக்குவரத்து (மோட்டார்) தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்டவை சார்பில் நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சங்க தலைவர் விஸ்வநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், போக்குவரத்து கழக மண்டல செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆட்டோ மற்றும் காரை கயிறு கட்டி இழுத்து வந்தனர். குமரன் சிலையில் இருந்து அருகில் உள்ள பஸ் நிலையம் வரை கயிறு கட்டி வாகனங்களை இழுத்தனர். தொடர்ந்து மீண்டும் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டனர்.