பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கி நடுரோட்டில் கிடந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கி நடுரோட்டில் கிடந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கி நடுரோட்டில் கிடந்த மொபட் மீது மோட்டார் சைக்கிள்மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிகண்ணன் (வயது 38). லாரி டிரைவர். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்து வந்தார். இதனால் இவருடைய குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் வேலை தேடினார். ஆனாலும் வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையில் கேரள மாநிலத்தில் லாரி ஓட்டுவதற்கு இவருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து கேரள மாநிலம் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து தனக்கு சொந்தமான மொபட்டில் காடையாம்பட்டியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கேரளா புறப்பட்டார்.
இவருடைய மொபட் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கருக்கன்காட்டுபுதூர் பிரிவு சாலை பகுதியில் நள்ளிரவு 11.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று நிலை தடுமாறிய மொபட் சாலையோர தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கோபி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பனியன் நிறுவன தொழிலாளர்கள் பலி
இதற்கிடையில் அந்த வழியாக நள்ளிரவு 11.45 மணிக்கு நயயூதிருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்து பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (22), சந்தோஷ் (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தமிழ்ச்செல்வன் ஓட்டினார். பின் இருக்கையில் சந்தோஷ் அமர்ந்து இருந்தார்.
அப்போது நடுரோட்டில் கோபிக்கண்ணன் ஓட்டி வந்த மொபட் விபத்துக்குள்ளாகி கிடப்பதை கவனிக்காமல் அதன் மீது எதிர்பாரத விதமாக மோதினர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தமிழ்ச்செல்வனும், சந்தோசும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீசார் விரைந்து வந்து 3பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள். பெருமாநல்லூரில் அடுத்தடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.