தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தேனி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் பாண்டியராஜன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த 2 ஆண்டாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவருக்கு வயிற்றுவலியும், சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்