மினிலாரி மோதி விவசாயி பலி
வீரபாண்டி அருகே மினி லாரி மோதி விவசாயி ஒருவர் பலியானார்.
தேனி :
வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் வீரப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தனது மனைவி மலையம்மாளுடன் மோட்டார் சைக்கிளில், அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை தேனி-கம்பம் சாலையோரத்தில் நிறுத்தினார். அவருடைய மனைவி தோட்டத்திற்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் இருந்து மண்வெட்டியை முருகேசன் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது தேனியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அதன் அருகே நின்று கொண்டிருந்த முருகேசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து வீரபாண்டி போலீசார் சின்னமனூரை சேர்ந்த மினிலாரி டிரைவர் ரஞ்சித்குமார் (24) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.