பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

Update: 2021-07-06 12:29 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், கொரோனா காலத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் சுல்தான்பாஷா கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, துணை செயலாளர்கள் வெங்கடேசன், சுந்தரேசன், சூடாமணி, நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ஆதவன்முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் தேசம் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ஏழுமலை, முருகன், ஞானசேகர், நகர அவைத்தலைவர் சிவா, பொருளாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்