வீட்டின் பூட்டை உடைத்து பணம், ஆவணங்கள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம், ஆவணங்கள் திருடுபோனது.

Update: 2021-07-05 19:54 GMT
திருச்சி
முசிறி
முசிறி அருகே  உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 43). இவர், அதே பகுதியில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் முத்துலட்சுமி வீட்டின் கதவை பூட்டி விட்டு வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.6 ஆயிரத்து 300 மற்றும் வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் திருட்டு போய் இருந்தன. இதுகுறித்து, முசிறி போலீசில் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்