டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
திருமங்கலம் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
திருமங்கலம்,ஜூலை
திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு எதிரே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து பாட்டில்கள் இருக்கும் அறையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் திரும்பிச் சென்றனர். நேற்று காலை டாஸ்மாக் ஊழியர்கள் வந்து திருட்டு முயற்சி நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் இதேபோல் திருட்டு முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் நகர் பகுதியில் சமீப காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன் தினம்கூட பத்திரப் பதிவு அலுவலர் வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கொள்ளைச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.