கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 157 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70,149 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 1,441 பேர் உள்ளனர். நேற்று 96 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 67,781 ஆகும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 3 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்தது.