தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-05 19:30 GMT
திருச்சி
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூரை அடுத்த எம்.புத்தூர் முல்லை நகரை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மகள் தியாஷினி (வயது 13). அங்குள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவி வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கினார். இதனை பார்த்த தன்ராஜ், மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி தியாஷினி உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்