அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

அரசு பஸ் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-07-05 19:19 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வேங்காபட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர் தனது உறவினர்களான முருகன் (54) மற்றும் மாரியப்பன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். குளித்தலை - தாளியாம்பட்டி செல்லும் சாலையில் அய்யனேரி பகுதி அருகேசென்று கொண்டிருந்தபோது, இதே சாலையில் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல், முருகன், மாரியப்பன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த 3 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்