மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-05 18:55 GMT
நெல்லை:

மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). தாழையூத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (38). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை பகுதியில் மது விற்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 173 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்