தளவாய்புரம்
தளவாய்புரம் அருகே முகவூர்- சொக்கநாதன்புத்தூர் செல்லும் சாலையில் நேற்று தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ்(வயது 41), சக்தி ஈஸ்வரன்(41) ஆகிய இருவரும் தனித்தனியே இருசக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது இருவரும் தலா 100 மதுபாட்டில்களை விற்பனை செய்ய மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் கிழக்கு போலீசார் அருப்புக்கோட்டை ரோட்டில் ரோந்து சென்ற போது 116 காலனி பஸ் நிறுத்தம் அருகே குல்லூர்சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்த புஷ்பராஜ்வயது என்பவர் 50 மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர்.