தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ராமநாதன், மாவட்ட பொருளாளர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொண்டரணி துணை செயலாளர் முருகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளையராஜா, கேப்டன் மன்ற செயலாளர் ராம்கி, நகர் செயலாளர்கள் முத்துக் காமாட்சி, பாண்டியன், அன்பு தெட்சிணா மூர்த்தி, சதக்கத்துல்லா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, பாலு, மாணிக்கம், ரகுநாதன், பாரதி, பிரகாஷ், வேல்மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருள் களும் விலை உயர்ந்துவிட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினை மத்திய, மாநில அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தே.மு.தி.க. கட்சியினர் கோஷமிட்டனர்.