‘கோவில் கருவறையில் சாமியை தரிசித்தது மனநிறைவை தருகிறது’-பக்தர்கள் பேட்டி
வீட்டு பூஜை அறையை காட்டிலும் கோவில் கருவறையில் சாமியை தரிசித்தது மனநிறைவை தருகிறது என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தனர்.
காரைக்குடி
வீட்டு பூஜை அறையை காட்டிலும் கோவில் கருவறையில் சாமியை தரிசித்தது மனநிறைவை தருகிறது என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தனர்.
பக்தர்களுக்கு அனுமதி
ஜோதிசண்முகசுந்தரம் (காரைக்குடி) - சுமார் 70 நாட்களுக்கு பின்னர் சாமி தரிசனம் செய்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன்பு நாங்கள் கோவில் வாசலில் நின்று ஒருவித நெருடலுடன் சாமி தரிசனம் செய்து வந்தோம். நேற்று முதல் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மனை கோவிலுக்குள் சென்று தரிசித்தது மனநிறைவு தருகிறது.
அழகுவேல் (மடப்புரம் கோவில் பக்தர்)- கொரோனா பரவல் காரணமாக மடப்புரம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லாததால் ஏராளமான பக்தர்கள் சாமியை பார்க்க முடியாமல் இங்கு வந்து கவலையுடன் திரும்பி சென்றனர். நேற்று முதல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதால் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மனை நீண்ட நாட்களுக்கு பின்னர் சாமி தரிசனம் செய்தோம். இது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்.வீட்டு பூஜை அறையில் தரிசித்ததை விட கருவறையில் சாமியை தரிசிப்பது மனநிறைவு தருகிறது.
மிகவும் மகிழ்ச்சி
காவேரி (திருக்கோஷ்டியூர்) - ஊரடங்கு தளர்வால் மதுரையில் இருந்து திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமியை நேரடியாக நின்று தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியாக உள்ளது.
மனநிறைவு