மதுரை மாவட்டத்தை சேர்ந்தது அங்காடிமங்கலம் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் ராஜமுனியாண்டி (வயது 5).இவனும் மற்றொரு சிறுவனும் அதே பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். அது சமயம் சிறுவன் ராஜமுனியாண்டி தண்ணீரில் மூழ்கியுள்ளான். அதை பார்த்து மற்றொரு சிறுவன் சத்தம் போட்டுள்ளான். உறவினர்கள் ராஜமுனியாண்டியை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சிறுவன் இறந்து விட்டான்.இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.