மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்;
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை உயர்வால் வாகன போக்குவரத்து வாடகை அதிகரிப்பதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாட்டு வண்டியில்
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில உயர்மட்டகுழு உறுப்பினர் நடராஜன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலார் சதீஷ், ஒன்றிய செயலாளர் திருமுருகன், மாநில நிர்வாகி முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து, பெட்ரோல்- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.