முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

முறைகேடு புகார் எதிரொலி: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

Update: 2021-07-05 18:20 GMT
வேலூர்

காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் சேனூர், சேவூர், சேர்க்காடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் உள்ளது. இதில் சேவூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் பிரபு (வயது 42). இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்தனர். இதையடுத்து இவர் பணியாற்றும் சேவூர் பஞ்சாயத்து மற்றும் கூடுதலாக ஒதுக்கப்பட்ட செம்பராயநல்லூர் ஊராட்சிகளின் கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் அவரை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரபு மீது வந்த புகாரின் பேரில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முழுமையான ஆய்வுக்கு பின்னரே அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்பது தெரியவரும் என்றனர்.

மேலும் செய்திகள்