பரமக்குடி,
பரமக்குடி பகுதியில் லாட்டரி மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. போலீசார் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் பரமக்குடி குத்துக்தெருவை சேர்ந்த தங்கவேலு (வயது52), துளசிராமன் (60), தினகரன் (24), முதுகுளத்தூரைச்சேர்ந்த ராஜ்குமார் (33) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் பிடித்து கைது செய்து காவலில் வைத்துள்ளார்.