தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-07-05 18:14 GMT
சிவகங்கை,

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், கட்டுமான பொருட்களின் விலையை உயர்வை கண்டிக்க தவறிய மாநில அரசை கண்டித்தும்  மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் திருவேங்கடம் தலைமை தாங்கினார்.நகர்செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார்.இதில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.ஆா்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஒன்றியச்செயலாளர்கள் ரமேஷ், முத்துசாமி, மாவட்ட நிர்வாகிகள் அருணாகண்ணண், துரைபாஸ்கரன், மாயழகு, வக்கீல் சவுந்தரராஜன், முருகானந்தம், மகளிரணி இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்