கறம்பக்குடியில் மதுவிற்ற 5 பேர் கைது
கறம்பக்குடியில் மதுவிற்ற 5 பேர் கைது
கறம்பக்குடி, ஜூலை.6-
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி சீனிகடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், வாணியதெரு, கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தனபால் (வயது 46), ரமேஷ் (34), கோவிந்தராஜ் (45), மனோகரன் (51), சரவணன் (36) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 234 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.