புதுக்கோட்டை, ஜூலை.6-
புதுக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்பவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது போதை ஊசி விற்பனை மீண்டும் தொடங்கி உள்ளது. டவுன் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் போதை ஊசி விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 23), அடப்பன் வயல் கார்த்திக் (24), திருமயம் ராஜ்குமார் (25), திருக்கோகர்ணம் பாண்டியன் (24), சேங்கை தோப்பு (21) ஆகிய 5 பேரையும் டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 மாத்திரைகள், 12 ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.