மணியகாரம்பாளையத்தில் ரூ 2 லட்சம் தாமிர கம்பிகள் திருட்டு
மணியகாரம்பாளையத்தில் ரூ 2 லட்சம் தாமிர கம்பிகள் திருட்டு
கணபதி
கோவை சரவணம்பட்டி, சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (வயது 45), ஜெயச்சந்திரன் (43). இவர்கள் கணபதி மணியகாரம்பாளையம்-நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் பேனல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இரவில் இங்கு புகுந்த மர்ம ஆசாமிகள், ஷட்டர்களை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தாமிர கம்பிகளை உடைத்துச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன், அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகிறார்கள்.