நத்தக்காடையூரில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நத்தக்காடையூரில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி;
முத்தூர்
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சவுமியா, லட்சுமி பிரியா, கிராம சுகாதார செவிலியர்கள் மகாலட்சுமி, அமுதா, மருத்துவமனை செவிலியர் நிர்மலா, சுகாதார ஆய்வாளர் தேவராஜன் தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய 4 ஊராட்சிக்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.
இதன்படி நேற்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.