ராணிப்பேட்டையில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-05 16:58 GMT
சிப்காட் 

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டம், டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றை மூடக்கோரியும், கட்டுமான பொருட்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், இதனை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தே.மு.தி.க. சார்பில் நேற்றுராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பூட்டுத்தாக்கு நித்தியா உள்ளிட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம், தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நிர்வாகிகளுடன் சென்று கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.

மேலும் செய்திகள்