வேடசந்தூரில் தீப்பிடித்து எரிந்த மினி லாரி
வேடசந்தூரில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில், கரூர் சாலையில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் முன்பு நேற்று முன்தினம் இரவு மினி லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த மினி லாரியில் திடீரென்று தீப்பிடித்தது.
இதுகுறித்து உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், மினி லாரியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் மினி லாரி எரிந்து நாசமானது.
மினி லாரியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.