காங்கேயத்தில் வாரச்சந்தை திறக்கப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காங்கேயத்தில் வாரச்சந்தை திறக்கப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காங்கேயம்
காங்கேயத்தில் வாரச்சந்தை திறக்கப்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாரச்சந்தை
காங்கேயம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களை வாரந்தோறும் திங்கட்கிழமை கூடும் வார சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்த வார சந்தை அதிகாலை முதல் இரவு வரை நடைபெறுகிறது.
காங்கேயம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வார சந்தைக்கு அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் வாரச்சந்தை மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு நாட்களில் நடமாடும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது வார சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் இரவு வரை காங்கேயம் வார சந்தை செயல்பட்டது. வார சந்தை வளாகத்தில் 60 சதவீதம் அளவுக்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. வழக்கமாக வார சந்தைக்கு வரும் நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு வார சந்தை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து வார சந்தை வியாபாரிகள் கூறும்போது “ காங்கேயம் வார சந்தைக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது அவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. தற்போது பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளதால் வரும் வாரங்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. என்றனர்.