தாராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தாராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.;
தாராபுரம்,
தாராபுரம் பகுதியில் 54 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்தும், மதுபிரியர்கள் மதுவாங்க மதுபிரியர்கள் ஆர்வம் காட்டாததால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
டாஸ்மாக் கடைகள்
தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் 16-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளில் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 2 விற்பனையாளர் பணியில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனால் மதுப்பிரியர்கள் சட்ட விரோதமாக ரூ.150-க்குவிற்க வேண்டிய மதுவை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி குடித்து வந்தனர்.மேலும் இதற்காக மதுப்பிரியர்கள் பலர் கார்,மோட்டார்சைக்கிள் போன்றவறறை போலீசாரிடம் வழக்கில் மாட்டிக் கொண்டு வாகனத்தை இழந்தனர்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் காலையில் 10 மணி முதல் இரவு 8 மணிவரை டாஸ்மாக் கடை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தாராபுரம் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 54 நாட்களுக்கு பிறகுது நேற்று திறக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.