தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
வாய்மேடு,
தலைஞாயிறு அருகே உள்ள உம்பளச்சேரி, வாட்டாகுடி, ஓரடியம்புலம், மணக்குடி, மூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியவில்லை என்றும், நடவு பணி செய்ய முடியவில்ைல என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மோட்டார் மூலமாக ஆற்றில் இருந்து தண்ணீர் இறைத்து வருகின்றனர். இதனால் குறுவை சாகுபடிக்கு கூடுதலாக செலவாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே ஆற்றில் கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.