சேவூர் வாரச்சந்தை செயல்படாத நிலையில் கோபி சாலையில் இருபுறமும் வாரச்சந்தை வியாபாரிகள் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.

சேவூர் வாரச்சந்தை செயல்படாத நிலையில் கோபி சாலையில் இருபுறமும் வாரச்சந்தை வியாபாரிகள் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.

Update: 2021-07-05 16:08 GMT
சேவூர், 
 சேவூர் வாரச்சந்தை செயல்படாத நிலையில் கோபி சாலையில் இருபுறமும் வாரச்சந்தை வியாபாரிகள் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.
சாலையோர கடைகள்
 தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் பல இடங்களில் வாரச்சந்தைகள்   கூடுமா, கூடாதா என குழப்பத்தில் நேற்று வழக்கம் போல அதிகாலையிலேயே தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும்  வேன்களில் வியாபாரிகள் விளைபொருட்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய சேவூர் கொண்டு வந்தனர். ஆனால் வாரச்சந்தை  திறக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து சந்தை வியாபாரிகள்  கோபி சாலையில் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். இதனால்  சாலையோர கடைகள் 200-க்கு மேல் ஆனது. இதனால்  வானக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்தனர்.
வாரச்சந்தையை திறக்க வேண்டும்
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது வாரச்சந்தை செயல்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது.இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறோம். வாரச்சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வாரச்சந்தையை திறக்க வேண்டும் என்றனர்.  

மேலும் செய்திகள்