தூத்துக்குடியில் சூதாடிய 70 பேர் கைது
தூ்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 720 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.