கோவில்பட்டியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
கோவில்பட்டியில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கலைக் கதிரவன் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டானுக்கு மாற்றம் செய்யப் பட்டார்.
அவருக்கு பதிலாக நெல்லை மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிய உதயசூரியன் கோவில்பட்டி புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவர் கூறுகையில்,‘
கோவில்பட்டி நகரில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனா பரவல் தமிழக அரசு தீவிர நடவடிக்கை காரணமாக குறைந்துள்ள நிலையில், அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அரசு விதிமுறைகளை மீறி அவசியகாரண மில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். அப்படி வந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்கள், கஞ்சா, சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை குறித்து பொது மக்கள் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுப்பவர் பெயர் ரகசியம் காக்கப் படும்’ என்றார்.