ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி.

Update: 2021-07-05 02:46 GMT
ஆவடி,

சென்னை கீழ்ப்பாக்கம், கார்டன் சாலை, மண்டபம் 2-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருடைய மகன் அமர்ஜித் (வயது 21). இவர், அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று ஆவடி அடுத்த பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான பாண்டியன் மற்றும் சேரன் ஆகியோரை பார்க்க அமர்ஜித் ஆவடி வந்தார். பின்னர் 3 பேரும் ஆவடி அடுத்த கண்ணபாளையம் பகுதியில் உள்ள ஏரியில் குளித்தனர்.

அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற அமர்ஜித் நீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய அமர்ஜித் உடலை மீட்டனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்