சிறுநாவலூர் ஏரியில் மீன்பிடி திருவிழா; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.
மீன்பிடி திருவிழா
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. தமிழக அரசின் மீன்வளர்ப்புத் துறையினரால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருச்சி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி அம்சா காந்தி தலைமையில் ஒரு லட்சம் கெண்டை மீன்குஞ்சுகள் ஏரியில் இனப்பெருக்கத்திற்காக விடப்பட்டன.
இனப்பெருக்கத்திற்கு பின் ஊரின் சார்பாக ஏரியில் மீன் பிடிப்பதற்காக ரூ.4¾ லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. மீதமுள்ள மீன்களை பிடிப்பதற்காக நேற்று காலை ஊர் பொதுமக்களுக்காக, அறிவித்தபடி, மீன்பிடி திருவிழா நடத்தப் பட்டது.
3 ஆயிரம் பேர் பங்கேற்பு
கோட்டப்பாளையம், பி.மேட்டூர், உப்பிலியபுரம், எரகுடி, பச்சபெருமாள்பட்டி உள்பட அக்கம் பக்கத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி வலையுடன் திரண்டு வந்து, மீன்களை பிடித்து சென்றனர்.
மீன்வளத்துறை அலுவலர் கர்ணன், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், துணைத்தலைவர் பாஸ்கர் முன்னிலையில் சுமார் 5 டன்னுக்கும் அதிகமான மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.