சரக்கு வாகனத்தில் மது கடத்திய 3 பேர் கைது
சரக்கு வாகனத்தில் மது கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராஜி மகன் துரை (வயது 47), மதுரை முத்து மகன் மணிகண்டன் (25), மனோகரன் மகன் கோபி (27) ஆகியோர் வந்தனர். அவர்கள் தர்மபுரி மாவட்ட பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 150 மதுபாட்டில்கள், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.