தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் வசித்து வருபவர் மருதகாசி மகன் பிரபு. அப்பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தைல மரக்காட்டில் தரையில் உதிர்ந்து கிடந்த சருகுகளில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டவர்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய தீத்தடுப்பு அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.