நாங்குநேரி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கிய போலீசார்
நாங்குநேரி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் முககவசம் வழங்கினர்.
நாங்குநேரி:
நாங்குநேரி சுங்கச்சாவடி வழியாக வரும் வாகனங்களில், முககவசம் அணிந்து வருகிறார்களா? என நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கி முககவசம் வழங்கினர். அப்போது சுங்க சாவடி நிர்வாக அதிகாரி மணிகண்டன், போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.