புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2021-07-04 19:54 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
61 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சராசரியாக இருந்து வருகிறது. அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 250 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 75 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 314 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு 603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 பேர் பலி
இந்தநிலையில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 333 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகமாக உள்ளது. கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்