தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா

தூத்தூர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2021-07-04 19:37 GMT
புதுக்கோட்டை
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் மணப்பட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, கொப்பனாபட்டி, கொன்னையூர், பொன்னமராவதி, வலையப்பட்டி, அஞ்சுபுளிப்பட்டி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் நேற்று அதிகாலை  கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். ஜிலேபி, விரால், கெண்டை, அயிரை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும், அதிகாரிகளும் கடுமையாக போராடி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகளவு குளத்தில் இறங்கி மீன் பிடித்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் செய்திகள்