ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்;

Update: 2021-07-04 19:10 GMT
மதுரை
மதுரையில் உள்ள காப்பகத்தில் நடைபெற்ற குழந்தை விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காப்பக நிறுவனர் சிவக்குமார் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதூர் தாமரைதொட்டி அருகில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோபிநாத், செயலாளர் செல்வா, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்