177 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளத்தில் நடைபெற்ற முகாமில் 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. டாக்டர் செந்தட்டி காளை தலைமையில், சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் காளீஸ்வரி, மகாலட்சுமி, ஆகியோர் அடங்கிய சுகாதார குழு 177 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.